கோவையில் 50000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.5,10,84,60,000/- (ரூபாய் ஐநூற்று பத்து கோடியே எண்பத்தி நான்கு இலட்சத்து அறுபதாயிரம்) தொகையானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய 1,74.599 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து தகுதியான 50,648 பயனாளிகளுக்கு தற்போது இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.5,06,48,000/- (ரூபாய் ஐந்து கோடியே ஆறு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரம்) வீதமும் ஆண்டிற்கு ரூ.60,77,76,000/- (ரூபாய் அறுபது கோடியே எழுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் மட்டும்) மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக மொத்தம் 4,76,353 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.47,63,53,000/- (ரூபாய் நாற்பத்து ஏழுகோடியே அறுபத்து மூன்று இலட்சத்து இம்பத்தி மூன்றாயிரம்) தொகையும் ஒரு ஆண்டிற்கு ரூ.571,62,36,000/- (ரூபாய் ஐந்நூற்று எழுபத்தியொரு கோடியே அறுபத்திரண்டு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம்) தொகையானது தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *