கோவையில் 60 மகளிர் தங்கும் விடுதிகள் மூடல்..! சமூக நலத்துறை நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் 368 மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது சில விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் வந்தது .

தங்கும் விடுதியில் உரிய வசதிகள் செய்து தர வேண்டும். முறையாக உரிமம் பெற்று நேர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக நலத்துறை அறிவித்தது. சில தங்கும் விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக புகார் தரப்பட்டது சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தபோது. 21 விடுதிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டது . இந்த விடுதிகள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.

இல்லாவிட்டால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பாக கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா கூறுகையில் , கோவை மாவட்டத்தில் பல்வேறு விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 60 தங்கும் விடுதிகள் கடந்த சில மாதங்களில் மூடப்பட்டது. தங்கும் விடுதிகள் முறையாக அனுமதி பெற வேண்டும்.

இளம் பெண்கள் நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. பதிவேடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். உரிய சதுர அடி அளவில் படுக்கை வசதி தங்குமிட வசதி செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கல்லூரி வளாக விடுதிகளிலும் கண்காணிப்பு முறையாக இருக்க வேண்டும். விதிமுறை மீறல்கள் இருந்தால் விடுதிகள் மூடி சீல் வைக்கப்படும் ,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *