கோவை அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்களால் பரபரப்பு..

கோவை சர்க்கார் சாம குளம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சியில் தொட்டிபாளையம் அரசு பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தினமும் கழிவறை சுத்தம் செய்ய வைப்பதாக புகார் இருந்தது.

மாணவர்கள் இந்த விஷயத்தை தங்களது பெற்றோர்களிடம் கூறி பள்ளிக்கு செல்ல மாட்டோம் என புலம்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆசிரியை முன்பு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விஷயத்தை பயம் கலந்த தயக்கத்துடன் கூறினர் .

மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் வந்து கக்கூஸ் சுத்தம் செய்யலாம் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என பள்ளி ஆசிரியர்களை கண்டித்தனர். ஆனால் ஆசிரியர்கள் நாங்கள் கழிவறையை சுத்தம் செய்ய கூறவில்லை . கழிவறைக்கு சென்று வந்தால் தண்ணீரை பயன்படுத்துங்கள் என கூறினோம் .அதை இப்படி சொல்லி விட்டார்கள் என மழுப்பலாக பதில் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி துறையினர் இந்த கழிவறை விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். தீண்டாமை நோக்கத்தில் கழிவறை சுத்தம் செய்ய குறிப்பிட்ட சில மாணவர்களை நிர்பந்தம் செய்தார்களா எனவும் விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *