கோவை அறிவு சார் நூலகத்தில் படித்த1.04 லட்சம் பேர்..!

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 05.01.2024 ம் தேதி அன்று கோயம்புத்தூர் உப்பிலிபாளையம், ஆடிஸ் தெருவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது.

மேலும், இந்த நூலகம் மற்றும் TNPSC, TNUSRB, TRB, TN-TET, SSC, GATE, UGC/NET/SET, UPSC, BANK, NDA, CAT, NEET, JEE, CLAT, RRB, IELTS, NCERT தேர்வுகளுக்கு பங்கேற்கும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 35718 நபர்கள், 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 66683 மாணவர்கள் மற்றும் ஜனவரி 2026 முதல் பிப்ரவரி வரை 4850 மாணவர்கள் என சுமார் 1.04 இலட்சம் மாணவர்கள் வருகைப் புரிந்து பயன்பெற்றுள்ளனர்.

குரூப் 2 தேர்வில் 6 மாணவர்களும் குரூப் 4 தேர்வில் 12 மாணவர்களும், IIT தேர்வில் 2 மாணவர்கள், வங்கித் தேர்வில் 1 மாணவர், NET தேர்வில் 1 மாணவர் வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மேலும், இம்மையத்தில் ஒவ்வொரு மாதமும் ENTREPRENEURSHIP, HUMAN RESOURCES, GRAPHICS DESIGNING AND VIDEO EDITING, DIGITAL MARKETING, SOCIAL MEDIA STRATEGIES, SSC, RRB & BANKING 2 2 SKILL DEVELOPMENT PROGRAM மற்றும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது.

மேலும், மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மா நகர் மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் ஆகிய இரண்டு இடங்களில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுபெற்று, விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த முதல்வர் படைப்பகத்தில் பட்டதாரிகள், UPSC, TNPSC, வங்கி மற்றும் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 48000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *