கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கார் கவிந்தது..
ஹோம் காலேஜ் பகுதியில் தலைகீழாக கிடக்கும் கார்..
கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பகுதியில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டதா
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்கள் செல்லாம். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏ ஐ கேமராக்கள் 44 இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் இறங்கு தளத்தில் இறங்க முயற்சிக்கும்போது விபத்து ஏற்படுவதாக தெரிகிறது .
இதை தடுக்க ரோலர் பேரியர் அமைக்கப்பட்டுள்ளது . இருப்பினும் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் தவிப்படைந்துள்ளனர்.
