கோவை உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்ட்: தமிழக முதல்வர் திறந்தார்
கோவை உக்கடம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதி இடிக்கப்பட்டது.
இதற்கு பதிலாக செல்வபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு 13 கோடி ரூபாய் செலவில் உக்கடம் முனையம் 1 என்ற பெயரில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்தது.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் வகையில் டவுன் பஸ்கள் நிறுத்தும் வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்டது.
ஆறு மாத காலத்தில் பணிகள் முடிந்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இந்த பஸ் ஸ்டாண்ட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த பஸ் ஸ்டாண்டில் 58 பஸ்கள் நிறுத்தும் வகையில் ரேக் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர 80 பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதியை பயன்படுத்த முடியும் .
தாய்மார்கள் பாலூட்டும் அறை பயணிகள் காத்திருக்கும் கூடம் மூன்று கழிவறை செல்போன் சார்ஜிங் பாயிண்ட் இலவச வைபை போன்ற வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உக்கடம் பஸ் டெர்மினல் 2 கட்டுமான பணிகள் 11.50 கோடி ரூபாய் செலவில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடக்கிறது. விரைவு பஸ் கேம் பயன்படுத்தும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்படுகிறது.
