கோவை கலெக்டர் ஆபீஸ்க்கு 16வது முறையாக குண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 16வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஏற்கனவே 15 முறை இமெயில் மூலமாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
