கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்..

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி தனது ஆண் நண்பரும் ஒருவருடன் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இந்த நிலையில் அங்கே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (31), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21) மதுரை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் மது போதையில் வந்துள்ளனர்.

கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பரை மிரட்டினர். யார் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு மாணவியிடம் அத்துமீறி அவர்கள் பேசி உள்ளனர். இதை தட்டி கேட்ட ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினார் . இதில் காயமடைந்த அவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை எங்கேயும் செல்ல விடாமல் தடுத்து விடியும் வரை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து சிறிது தூரம் நடந்து சென்று அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் மாணவியை காணாமல் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார் .

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கே சென்று விசாரணை நடத்தினார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் மீது அன்னூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை துடியலூர் பகுதியில் மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி தப்ப முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த மூன்று பேரும் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. 112 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் அவர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று மாத காலத்தில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தடுமாறிய கைதி

கோர்ட்டில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கார்த்திக் என்கிற காளீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை. அவர் ஊன்று போல் வைத்து தடுமாறி நடந்து வந்தார். அவருடன் இருந்த மற்ற குற்றவாளிகள் நன்றாக நடந்து கொண்டனர். முகத்தை மறைக்க மூன்று பேரும் குல்லா அணிந்திருந்தனர்.

கோர்ட்டில் பரபரப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் தகவல் அறிந்ததும் கோர்ட் வளாகத்தில் பெரும் கூட்டம் குவிந்தது. இதைத் தொடர்ந்து துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் கயிறு கட்டி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

#சாகும் வரை ஆயுள்

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 4 மாத காலத்தில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்ற பாலியல் பலாத்கார வழக்குகளை விட இந்த வழக்கின் விசாரணை வேகமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *