கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலையா..? இந்து முன்னணி கடும் எதிர்ப்பு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில்
மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்,
இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு இன்று புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது
மகாத்மா காந்தியின் நினைவாக காந்திபுரம் என காட்டூர் பகுதி அழைக்கப்பட்டது .
காந்திபுரத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு செல்லும் வழியில் லட்சுமி மில்ஸ் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு மார்பளவு ராஜாஜி சிலையை நிறுவியது.
அவரது நினைவு நாள் அன்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் ரோட்டிற்கு இடது புறமாக வரும் வழியில் ஈ வெ ராமசாமியின் உருவச்சிலை வைக்கப்பட்டது.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதற்கு அனுமதி அளித்ததாக கல்வெட்டில் உள்ளது.
கோவை மாநகராட்சி அனுமதி பற்றி அதில் எந்த குறிப்பு இடம்பெறவில்லை.
காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் மேம்பால வேலை துவங்கிய பொழுது பணிகளுக்கு இடையூறாக இருக்கிறதென்று
இரண்டு சிலைகளையும் அகற்ற முடிவு செய்தனர்.
ராஜாஜி சிலையை லட்சுமி மில்ஸ் நிறுவனம் எடுத்துச் சென்றது.
ஈவே ராமசாமி சிலையை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் அருகில் வைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி மிகவும் பிரசித்தி பெற்ற காந்திபுரம் விநாயகர் கோவிலின் முன்பாக
ஈ .வெ .ராமசாமி சிலை நிறுவப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபடுகின்ற கோவிலுக்கு எதிரில்
பெரியாரின் சிலை உள்ளது பக்தர்களின் மனதை புண்படுத்தி வருகிறது.
2001 ம் ஆண்டு அகற்றப்பட்ட ராஜாஜி சிலையை எங்கேயும் மாநகராட்சி வைக்கவில்லை.
ஈவே ராமசாமி சிலையை விநாயகர் கோவிலுக்கு எதிரே நிறுவ மாநகராட்சியிடம் எந்த விதமான அனுமதியும் பெறவில்லை . சிலையை
உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் கோட்டை பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன் மாவட்ட தலைவர் தசரதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மாவட்ட துணைத் தலைவர் சோமு மாவட்ட பொறுப்பாளர் தம்பி சரவணன் மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
