கோவை கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு..!
ஆள் நடமாட்டம் , பஸ்கள் இன்றி காணப்பட்ட உக்கடம் பஸ் ஸ்டாண்ட்..
கோவை மாவட்டத்தில் மத்திய அரசு கண்டித்து பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. அரசுத்துறை தனியார் மயமாக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டன. கேரள மாநிலத்திலும் தொழிற்சங்கங்களில் கடுமையான போராட்டம் மற்றும் ஸ்ட்ரைக் காரணமாக அங்கே பயணிகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க பட்டுள்ளது. மாநில அரசுகள்
மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தொகுப்பு சட்டங்கள் நிறைவேற்றி இருப்பதை திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது, அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்க கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது.
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கோவையில் இருந்து கேரளாவின் பாலக்காடு, திருச்சூர் எர்ணாகுளம் மலப்புரம் கோழிக்கோடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
தமிழக எல்லையான வாளையார் வரை மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். பயணிகள் பலர் ரயில் மார்க்கமாக கேரள மாநிலத்திற்கு சென்று கொண்டனர் இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.
