கோவை கேரளா எல்லையில் தேர்தல் அசம்பாவிதம் தடுக்க ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில எல்லை மாவட்ட அதிகாரிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.


இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்
, திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் கணேசன், பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, போலீஸ் அதிகாரிகள் சுதர்சன், இளங்கோ ,அஜித்குமார் , சாபு மேத்யு
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவை மார்க்கமாக ஹவாலா பணம் மற்றும் வாக்காளர்களுக்கான பணம் , பரிசுப் பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறதா , தடை செய்யப்பட்ட பொருட்கள் தேர்தலில் அசம்பாவிதம் செய்யும் வகையிலான நடவடிக்கைகள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள் உள்பட தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட வன எல்லை பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா
, தேடப்படும் குற்றவாளிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறதா என கண்டறிய வேண்டும்.

கேரள எல்லை மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை மாவட்ட எல்லையில் தடுக்க வேண்டும்.

கேரள வாக்காளர்கள் கோவையில் ஓட்டு பதிவு செய்வதை தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைத்து சரிபார்க்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பேசுகையில், ” கோவை மாவட்ட எல்லையில் 13 செக்போஸ்ட்கள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் இங்கே கூடுதல் கண்காணிப்பு போலீஸ் சோதனை நடத்த வேண்டும்.

கேரளா எல்லைக்குள் வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களை விசாரித்து அனுப்ப வேண்டும். மாவட்ட எல்லையில் முக்கிய பகுதிகளை கண்காணிக்க வேண்டும். கோவை மாவட்ட அதிகாரிகளுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும், ” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *