கோவை கோனியம்மன் தேர்: பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

கோவையின் காவல் தெய்வம் என்ற பெருமை பெற்ற கோனியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடந்தது. ராஜ வீதி தேர்நிலை திடலில் இருந்து அம்மன் திருத்தேரில் வீதி உலா நடந்தது. ராஜவீதி , ஒப்பண்ணக்கார வீதி, பெரிய கடை வீதி வழியாக தேர் கோயிலை வந்தடைந்து மீண்டும் தேர் நிலை திடல் சென்றடைந்தது.

இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோனியம்மன் கோயிலில் சுவாமியை தரிசிக்க கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் விழா காரணமாக ராஜவீதி , பெரிய கடை வீதி , ஒப்பண்ணக்கார வீதி, உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோடு, செல்வபுரம் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது . பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *