கோவை நெகமம் இரட்டை கொலை கைதான வாலிபர் பகிர் வாக்குமூலம்..
கொலை செய்யப்பட்ட சிறுமி
கோவை நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் பூபதி. இவரது மூத்த மகள் ஹரிதா(19). இரண்டாவது மகள் கௌசி (17).
கௌசியை அந்த பகுதியை சேர்ந்த அபிஷேக் ( 24) என்பவர் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற அபிஷேக் இளம் பெண்ணின் பாட்டி மயிலாத்தாள் (65) என்பவரிடம் பேத்தியை திருமணம் செய்து தர வேண்டும் என கேட்டுள்ளார்.
அவளுக்கு 17 வயதுதான் ஆகிறது. அதனால் திருமண வயது வந்ததும் அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் இப்பொழுது நீ இங்கிருந்து போய் விடு இனி வர வேண்டாம்
என்ன மயிலாத்தாள் கூறியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த அபிஷேக்
எனக்கு உங்களது பேத்தியை திருமணம் செய்து தராவிட்டால் நடப்பதை வேறு யாரையும் உயிருடன் விடமாட்டேன் என மிரட்டினார்.
இது தொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கே இருந்த கௌசி உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார். ஆத்திரமடைந்த அபிஷேக் கொடூரமாக கத்தியால் அவரை குத்தினார். தடுக்க வந்த மயிலாத்தாள் மற்றும் ஹரிதா ஆகியோரையும் கத்தியால் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த கௌசி மற்றும் மயிலாத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஹரிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக நெகமம் போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.
கைதான அபிஷேக் அடுத்த வாக்குமூலத்தில் அளித்த வாக்குமூலத்தில் நான் எனது காதலியை திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன் ஆனால் அவர்கள் வயதை காரணம் காட்டி தொடர்ந்து மறுத்து வந்தனர் எனக்கு இதனால் அவர்கள் மீது கடும் கோபம் ஏற்பட்டது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வீட்டிற்கு சென்றேன் கத்தியை காட்டி மிரட்டி பார்த்தேன். ஆனால் அவர்கள் பயப்படவில்லை. என்னை எதிர்த்துப் பேசியதால் ஆத்திரத்தில் இருந்த நான் கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்றார்.
