கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் அமையுமா..?!

கோவை மாவட்டத்தில் உள்ளூர் திட்ட குழுமம் குழுமம் மூலமாக லே அவுட், கட்டட வரைவு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 20 ஆண்டிற்கும் மேலான காத்திருப்புக்கு பின்னர் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 2 ஆண்டிற்கு முன் கோவை பெரு நகர வளர்ச்சி குழுமம் (கோவை அர்பன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குறிப்பாக செயலாளர் அந்தஸ்தில் அதிகாரி மூலமாக இந்த குழுமம் உருவாக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இயக்குநர், துணை இயக்குநர் என பல முக்கிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான் வெளியான பின்னர் பெரு நகர வளர்ச்சி குழுமத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. கோவையில் வேகமாக வளரும் முக்கிய நகரமாக இருக்கிறது. அதிக சதுரடி பரப்பில் அடுக்குமாடிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அடுக்குமாடிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி விட்டது.

இதற்கேற்ப கட்டமைப்புகள் ஏற்படுத்த பெரு நகர வளர்ச்சி குழுமம் தேவை சென்னை நகரில் பெரு நகர வளர்ச்சி குழுமத்தின் மூலமாக பணிகள் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் சதுரடி பரப்பு வரை உள்ளூர் திட்டகுழும அனுமதி பெறப்படுகிறது அதற்கு மேல் கட்டடம் கட்ட சென்னையில் உள்ள நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி பெற வேண்டியுள்ளது.

விண்ணப்பங்கள், சரிபார்ப்பு எல்லாமே சென்னையில் இருந்து தான் நடக்கிறது. கோவையில் அலுவலகம் அமைந்தால் பணிகள் மிக எளிதாகும் என்பதால் தான் கோவை பெரு நகர வளர்ச்சி குழுமம் கோரப்பட்டது.

உள்ளாட்சிகள், நகரமைப்பு பிரிவு, உள்ளூர் திட்டகுழுமம் சர்வே, வருவாய்த்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலரை வளர்ச்சி குழுமத்தில் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டது. புதிதாக உருவாகும் இந்த அலுவலகத்திற்கு தனி வளாகத்தில் இடம் தேடும் பணி நடக்கிறது.

பெரு நகர வளர்ச்சி குழுமம் கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இனி அனைத்து வகையான லே அவுட், கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 1532 சதுர கி.மீ பரப்பிலான திட்ட குழும பகுதியில் கட்டுமான பணிக்கான அனுமதி பெரு நகர வளர்ச்சி குழுமத்திடம் பெற வேண்டியிருக்கும்.

கட்டுமான துறையினர் கூறுகையில், “பெரு நகர வளர்ச்சி குழுமம் அமைக்ப்பட்டதால், உரிய விதிமுறைகள் இருந்தால் விரைவாக அனுமதி பெற முடியும் உள்ளாட்சி, உள்ளூர் திட்ட குழுமம் என பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து வகையான அனுமதிகளை பெற்று கட்டடம் கட்ட தேவையான ஏற்பாடு செய்ய முடியும். சென்னைக்கு அடுத்தபடி கோவையில் பெரு நகர் வளர்ச்சி குழுமம் அமைய இருப்பதால் கட்டுமான துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இனி அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட நீண்ட கால அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய நிலையிருக்காது, கோவையில் உரிய விதிகளின் படி அனுமதி பெற முடியும். அலுவலகம் உருவாக்கும் பணி தாமதம் ஏற்படுகிறது. சில மாதங்களில் சியுஎம்ஏ அலுவலகம் என எதிர்பார்க்கிறோம். “என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *