கோவை மாநகராட்சியில் 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்..!
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் , மேயர் ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நடப்பு மாநகராட்சி பட்ஜெட்டில் 4915.50 கோடி ரூபாய் வருவாய் மற்றும் மூலதன வரவினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவாக 5041.71 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது . 126 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் உக்கடம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஸ்கை வாக் என்ற நடை மேம்பாலம் அமைக்கப்படும். அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் தனியார் பங்குடன் இரண்டு இடங்களில் ஸ்கை வாக் நடை மேம்பாலம் அமைக்கப்படும். பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் நடத்தப்படும்.
சுகாதாரப் பணிகளுக்கு அதிக தொகை செலவிடப்படும். தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணி செய்யப்படும். நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் குறிப்பாக நொய்யல் ஆறு தூர்வாரி சீரமைக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
