கோவை மாநகரில் தடையின்றி குடிநீர் வரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பு; கோவை மாநகராட்சி பகுதிகளில் சிறுவாணி, பில்லூர் 1,2,3 ஆழியாறு ,பவானி குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .

மாநகர் முழுவதும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் மூலமாக 1.32 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநகர் முழுவதும் 35 கோடி லிட்டருக்கு அதிகமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து 5 கோடி லிட்டர் குடிநீர் தரப்படுகிறது.

மாநகரின் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தடையின்றி வழங்க முடியும். அணை மற்றும் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் தேவையான அளவுக்கு இருக்கிறது. எனவே குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *