கோவை மாவட்டத்தில் இறுதிப்பட்டியலில் 26.97 லட்சம் வாக்காளர்கள்..!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதில் கோவை மாவட்டத்தில் நேற்றைய தேதி வரை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற உள்ள வாக்காளர்களின் விவரம் வெளியிடப்பட்டது.
இதில் கோவை மாவட்டத்தில்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 279465 வாக்காளர்கள், சூலூர் சட்டமன்ற தொகுதியில் 303565 வாக்காளர்கள்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 407507 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 291537 வாக்காளர்கள், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 287519 வாக்காளர்கள், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 186518 வாக்காளர்கள், சிங்காநல்லூர் பகுதியில் 266065 வாக்காளர்கள் கிணத்துக்கடவில் 300504 வாக்காளர்கள் பொள்ளாச்சியில் 202016 வாக்காளர்கள் வால்பாறையில் 172496 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்தது.
கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 26,97,192 பேர் இடம் பெற உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் இடம் பெற்றிருந்தனர். மாவட்ட அளவில் 6.50,590 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த இரு மாதங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதில் மாவட்ட அளவில் தாலுகா அலுவலகம், பூத் லெவல் ஆபீஸர் அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலமாக 1,22,584 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் ஆண் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னரும் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி தொடர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
