கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி; தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றது . இந்த நிலையில் இன்று தேர்தல் பார்வையாளர் மகபீர் பிரசாத், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஆர்டிஓ .,கள் ராமகிருஷ்ணன் , மாருதி பிரியா தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் , வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் பார்வையாளர் எந்த பகுதியில் அதிக இறந்த வாக்காளர்கள் இருந்தனர். ஏதாவது பகுதியில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்களா கல்லூரியில் மாணவ மாணவிகளை புதிய வாக்காளர்களாக சேர்க்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டது.
இளம் வாக்காளர்கள் அதிகரித்து இருக்கிறார்களா, வாக்காளர் பட்டியலில் ஓட்டுச்சாவடி மேப் மற்றும் லொகேஷன் விபரங்கள் முறையாக இடம் பெற்றுள்ளதா என விசாரித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி எதுவும் இருக்கக்கூடாது. வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் விடுபடாமல் இணைக்கப்பட வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் வந்தால் அதை முறைப்படி பெற்று பட்டியலில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.
