கோவை மாவட்டத்தில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் இருந்தது. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி, தேர்தல் பிரிவினர் ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால வாக்காளர்கள் அடிப்படையில் அதிக ஓட்டு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 3117 ஓட்டு சாவடிகள் இருந்தது. தற்போது 446 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 6.50 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது மாவட்ட அளவில் 25.50 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

எனவே கூடுதல் ஓட்டு சாவடிகள் தேவையில்லை என அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர் இந்த நிலையில் ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை 39 குறைக்கப்பட்டது. மாவட்ட அளவில் 3524 ஓட்டு சாவடிகள் என இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ், வனத்துறை, வருவாய்த்துறை மூலமாக மாவட்ட அளவில் சென்சிடிவ் என்ற பதட்ட ஓட்டு சாவடிகள் தொடர்பான பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 348 ஓட்டு சாவடிகள் சென்சிடிவ் என்ற வகையில் இருந்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலை இருக்கிறது. 450 ஓட்டு சாவடிகள் சென்சிடிவ் என்ற வகையில் இருக்கலாம், இன்னும் இறுதி செய்யவில்லை விரைவில் அறிவிக்கப்படும் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகைவேல் இன்று தெரிவித்தார்.

போலீசார் ஆய்வு பணி முடிந்து சில நாட்களில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் அறிவிக்கப்படும். அபாய வன விலங்குகள், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள வனப்பகுதி, மோதல் தாக்குதல் நடந்த பகுதி, பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்த பகுதி, சாதி மத ரீதியான மோதல்கள் உள்ள பகுதி போன்றவை சென்சிடிவ் ஏரியா என அடையாளப்படுத்தப்பட்டு அங்கே உள்ள ஓட்டு சாவடிகள் சென்சிடிவ் எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *