கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழு அளவில் தயார்..!

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு நடத்தினார். நாளை, மாநில அளவில் இந்திய தேர்தல் கமிஷனர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் நாட்கள், அதற்கான பணிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது.

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக தலைமை தேர்தல் அதிகாரி, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் ,தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது; கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு அளவில் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நிறைவு பெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேவையான ஆவணங்கள், ஓட்டு சாவடி வாரியான வாக்காளர் பட்டியல் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அங்கே அடிப்படை வசதிகள் | செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் சுமார் 18,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களின் விவரங்கள் தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்ட அளவில் தேர்தல் பணிகளில் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் தேர்தலுக்கு தேவைப்படும் ஆவணங்கள் தளவாடப் பொருள்கள் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கட்டுப்பாட்டு அறை தயார் செய்யப்படும்.

பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு பிரிவு, மீடியா மானிட்டர் பிரிவு கணக்கு பிரிவு போன்ற பிரிவுகள் துவக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழு வீட்டில் தயார் நிலையில் இருக்கிறது மாவட்ட அளவில் பதட்டமான ஓட்டு சாவடிகள் தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. போலீசுடன் இணைந்து சென்சிட்டி ஏரியா பகுதிகளில் ஆய்வு நடக்கிறது.

இவ்வாறு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *