கோவை மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்..

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் நாளை துவங்குகிறது.
வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது.

கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் தேர்வு நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் 130 முதன்மை கண்காணிப்பாளர்கள், 130 துறை அலுவலர்கள், 2100 அறைக்கண்காணிப்பாளர்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 365 அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 19,344 மாணவர்கள், 16,368 மாணவிகள் என மொத்தம் 35,712 மாணவர்களும், 852 தனித்தேர்வர்களும் என மொத்தம் 36,564 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *