கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 36 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்..
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்
எழுதவுள்ளனர்
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வும், 5-ம் தேதி ஆங்கிலம், 9 ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 13-தேதி இயற்பியல், பொருளாதாரவியல், வேலைவாய்ப்பு திறன்,
17ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகவியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசீயன் டெக்ஸ்டைல், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் வேளாண் அறிவியல், நர்சிங் உள்ளிட்ட தேர்வுகளும்,
மார்ச் 23ம் தேதி உயிரியல் தாவரவியல், வணிக கணிதம், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல், எலட்ரானிக், மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், ஆபிஸ் மேனேஜ்மென்ட் தேர்வுகளும்,
26-ம் தேதி கணினி அறிவியல் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ வேதியியல், அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், அரசியில் அறிவியல் புள்ளியியல், நர்சிங், பேசிக் எலட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.
இந்த தேர்வு கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் 130 முதன்மை கண்காணிப்பாளர்கள், 130 துறை அலுவலர்கள், 2100 அறைக்கண்காணிப்பாளர்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 365 அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 19,344 மாணவர்கள், 16,368 மாணவிகள் என மொத்தம் 35,712 மாணவர்களும், 852 தனித்தேர்வர்களும் என மொத்தம் 36,564 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
