கோவை மாவட்டத்தில் 182 சென்சிடிவ் ஒட்டுச்சாவடிகள்..!
கோவை மாவட்டத்தில் 3563 ஒட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது.
ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்கள் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள். வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ஒட்டு பதிவு மிக அதிகமாக நடந்த ஓட்டு சாவடி, மிகவும் குறைவாக ஓட்டு பதிவான ஓட்டு சாவடி,
சாதி மத ரீதியான மோதல், ஓட்டு பதிவு தொடர்பான மோதல், ஓட்டு புறக்கணிப்பு, ஒட்டு போட மாட்டோம் என எதிர்ப்பு உள்ள பகுதியில் உள்ள ஒட்டு சாவடி ஓட்டு பதிவில் முறைகேடு புகார் உள்ள ஒட்டு சாவடி போன்றவற்றை பதட்ட பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
போலீசார் சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை ஆய்வு செய்து சமீபத்தில் தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தனர் . இதில் 182 ஒட்டு சாவடிகள் சென்சிடிவ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 371 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் இருந்தது. இந்த முறை சென்சிடிவ் ஆக இருந்த 189 ஓட்டு சாவடிகள் நீக்கம் செய்யப்பட்டது.
கடந்த தேர்தலை விட கூடுதல் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக 50 சதவீதம் அளவிற்கு சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் அதிரடியாக குறைக்கப்பட்டது.
