கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து; மாணவி சாவு பொதுமக்கள் மறியல்..!
கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டது . மேற்கு பைபாஸ் என அழைக்கப்படும் இந்த ரோட்டில் இன்னும் முறையான போக்குவரத்து துவக்கப்படவில்லை. இருப்பினும் மதுக்கரையிலிருந்து கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் பேரூர் பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.
இன்று ஆட்டோ ஒன்று ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் காயமடைந்தனர் . ஆபத்தான நிலையில் மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கோவை புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். ற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அறிவொளி நகர், அண்ணா நகர் பகுதிகளில் ரோடு சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது .
இந்த பகுதியில் விபத்தை தடுக்க போதுமான சாலை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. மேலும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சாலையை கடக்கும் பொதுமக்கள் அதிவேகமாக வரும் வாகனங்களால் அச்சமடைந்துள்ளனர். எனவே கொடூரமான கோர விபத்துகளை தவிர்க்க உடனடியாக பாதுகாப்பு செயல் திட்டங்களை மாநில நெடுஞ்சாலை துறையினர் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விபத்து நடந்த அறிவொளி நகர் சந்திப்பு பகுதியில் மறியல போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Yo, 99win33 ain’t bad. Got a good selection of games and betting options. Could use a little sprucing up but hey, if it works, it works! Just sayin’. 99win33
Heard some good things about bet7788. Finally checked it out and seems solid. Decent range of sports to bet on and the live betting is pretty engaging. Thumbs up from me. bet7788
Alright, fc88vn’s the real deal if you’re looking for some local flavor. They know what’s up. Good platform, easy to use. No complaints from this guy. fc88vn