கோவை மேற்கு ரிங் ரோடு: முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கோவை மதுக்கரை பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு ரிங் ரோடு (Coimbatore Western Ring road) அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவக்கப்பட்டது.

மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது.

250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு பெற்று ரோடு மார்க்கிங் மற்றும் பெயர் பலகை, வழிகாட்டி பலகை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.

இன்று மதியம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கோவை மண்டல நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மார்ட்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு பைபாஸ் ரோடு வழியாக கோவை புதூர் , சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், பேரூர், செட்டிபாளையம், பேரூர், பச்சாபாளையம் மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம். இந்த ரோட்டில் வழியாக
சிறுவாணி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர் , நரசிபுரம் ,கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, ஈசா யோகா, வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை இன்றி சென்றுவர முடியும் .

மேலும் இந்த ரோடு மருதமலை கோவிலுக்கு செல்லவும் பிரதானமாக பயன்படுத்தப்படும். புதிய பைபாஸ் ரோடு திறக்கப்படும் போது கோவை பாலக்காடு ரோடு வழியாக போக்குவரத்து கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *