கோவை ரயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மார்க்கமாக ரயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் , போதைப்பொருள் தடுப்பு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெட்டியில் ரெக்ஸின் பேக் இருந்தது.

அதை திறந்து பார்த்தபோது திறந்து பார்த்தபோது அதில் 22 கிலோ எடையில் கஞ்சா இருந்தது. இதனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். போலீசார் சோதனை நடத்துவதை முன்கூட்டியே அறிந்த கஞ்சா கடத்தல் கும்பல் கஞ்சா பொட்டலங்களை பேக்கில் விட்டு விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது .

சந்தேக நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 30க்கும் மேற்பட்ட ரயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களையும் சோதனை செய்தால் கடத்தல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *