கோவை வனக்கல்லூரி சுவரில் எழுதிய இந்தி வாசகங்கள் அழிப்பு

கோவை தடாகம் ரோட்டில் உள்ள தென்னக வனசரக கல்லூரி வளாக சுற்று சவரில் தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. இதில் ஹிந்தியில் எழுதப்பட்ட எழுத்துக்களை சிலர் கருப்பு மையினால் அழிந்துவிட்டனர்.

இந்தி எழுத்துக்களை அழித்தது யார் என ஆர் எஸ் புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக இந்திக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி திணிப்பு கூடாது என ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தொடர்பான அலுவலக சுவரில் எழுதப்பட்ட இந்தி வாசகங்கள் அழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *