கோவை வனப்பகுதியில் சண்டை போட்ட ஆண் யானை சாவு

கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகளுக்கு இடையே நேற்று சண்டை ஏற்பட்டது. இதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலத்த காயங்களுடன் நீரோடை பகுதியில் இறந்து கிடந்தது.

இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றிக்கொண்டு இருக்கின்றன .

ஒரு கூட்டத்திற்கும் இன்னொரு கூட்டத்திற்கும் அடிக்கடி மோதல் இருப்பதாக தெரிகிறது. இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை பரிதாபமாக இருந்தது.இது வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையின் சடலம் அதே இடத்தில் பிறகு பரிசோதனை செய்யப்பட்டு தந்தம் அகற்றப்பட்ட பின்னர் குழி தோண்டி மூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *