தாத்தா பாட்டிக்கு லெட்டர் போடுங்க,கோவை விழாவுக்கு ஏற்பாடுங்க…
“கோவை விழா” 18 வது எடிசன் கோயம்புத்தூரில் 14 நவம்பர் 2025 முதல் 24 நவம்பர் 2025 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“கோவை விழா” குழுவுடன் இணைந்து கோவை அஞ்சல் கோட்டம் “பேரன்பு” என்ற நிகழ்வில் “தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதும்” செயல்பாட்டினை இந்த வருடமும் செயல்படுத்துகிறது.
-14.11.2025 அன்று “கோவை விழா” “பேரன்பு” நிகழ்ச்சியின் தொடக்கத்தினை முன்னிட்டு SSVM World School, சிங்காநல்லூரில், 2000 பள்ளிக் குழந்தைகள் “தாத்தா-பாட்டிக்கு கடிதம் எழுதி பங்கு பெற்றனர்.
குழந்தைகள், தங்கள் அன்பு, மரியாதை மற்றும் நன்றிகளை தங்களது தாத்தா – பாட்டிக்கு கடிதம் எழுதி அஞ்சல் வாயிலாக தெரிவிக்கும் வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டனர்.
கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர், சிவ சங்கர், Dr. மணிமேகலை மோகன், நிர்வாக இயக்குனர், SSVM நிறுவனம், “கோவை விழா” குழுவின் சார்பாக, திரு. வினீத், பேரன்பு, செல்வி. இமயா, லில் ஹுயுமன், நிறுவனர், திரு.அம்ரித், திரு. அருண், (YOUNG INDIA-THALIR) நெயில் கிக்கானி, (YOUNG INDIA-CHAIR), ஆகியோர் நிகழ்ச்சில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கு பெற்ற பள்ளிக் குழந்தைகள், தங்கள் கைப்பட எழுதிய அன்பு கடிதங்களை தாத்தா – பாட்டிக்கு அனுப்ப வாய்ப்புக் கொடுத்த அஞ்சல் துறைக்கும், கோவை விழா அமைப்பிற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
