கோவை வெள்ளிங்கிரி மலையில் 5 ஆண்டில் 40 பேர் சாவு..!
தென்கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 5 லட்சம் பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏழுமலைகளை ஏறி கிரி மலையை அடைய வேண்டும். மலை ஏறி இறங்க சுமார் எட்டு மணி நேரம் தேவைப்படும். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்கள் மட்டுமே தடையின்றி மலை ஏற முடியும்.
ஆனால் போதுமான உடல் திறன் இல்லாதவர்கள் பத்தில் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக மலையேற ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நடுத்தர வயது உள்ளவர்கள் முதியவர்கள் மலை ஏற முடியாமல் பாதியில் திரும்பி வரும் நிலைமையும் இருக்கிறது.
மலை அடிவாரத்தில் பிரஷர் சோதனை நடத்தப்படுகிறது. மேம்போக்காக நடத்தப்படும் இந்த சோதனையில் உடல் நலன் நன்றாக இருக்கிறது என மலை ஏற அனுமதிக்கிறார்கள்.
வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 40 பக்தர்கள் பல்வேறு நலக்குறைவுகள் காரணமாக இறந்துவிட்டனர்.
கடந்த 2022 ம் ஆண்டில் 13 பேரும், 2023ம் ஆண்டில் 8 பேரும், 2024 ம் ஆண்டில் 9 பேரும், 2025ம் ஆண்டில் 7 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 3 பேரும் உயிரிழந்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் கூட திடீர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுவதாக தெரியவந்துள்ளது.
இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளியங்கி மலையேற உடற்தகுதி சான்றிதழை கட்டாயமாக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். டாக்டரிடம் உடல் தகுதி சான்று பெற்று வந்தால் இனி மலை ஏற அனுமதிக்க வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
