சந்திர கிரகணம்: மருதமலை கோயில் நடை சாத்த உத்தரவு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நடக்கவுள்ளது.

இதன் காரணமாக பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைதிறப்பு வரும் நான்காம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறும். அந்த நேரத்தில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருகோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *