சபரிமலை சீசனால சரக்கு விற்பனை குறையுதா..
கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கிறது. ஒவ்வொரு கடைகளின் மூலமாக தினமும் 2 லட்ச ரூபாய் 5 லட்ச ரூபாய் வரை மதுபானம் விற்பனையாகி வருவதாக தெரிகிறது. சமீப காலமாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை சற்று குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. தினசரி மதுபான விற்பனையை டாஸ்மாக் நிர்வாகத்தினர் தங்களது விற்பனை சர்வர் விவரங்களில் காண முடியும். தற்போதைய சூழலில் மதுபான விற்பனை குறைந்து வருவதாக தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்தினர், ஆய்வு நடத்தினர் .
எந்த கடைகளில் மதுபான |விற்பனை குறைந்தது. அந்த பகுதியில் உள்ள சூழ்நிலை விற்பனை குறைவிற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். இதற்கு சபரி மலை சீசன் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பக்கர்கள் மாலை அணிந்த விரதம் இருப்பதால் இந்த கார்த்திகை மாகம் மது விற்பனை குறைவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜான் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் சபரி மலை சீசன், பழனி மலை முருகன் சீசனில் டாஸ்மாக் விற்பனை சற்று குறைவது வாடிக்கை தான். இந்த சீசனிலும் அது போல் தான் மது விற்பனை சற்று குன்றவாக இருக்கிறது. இது தவிர டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மக்கள் கேட்கும் முன்னணி பிராண்ட் மதுபானங்களை சப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். டாஸ்மாக்கில் ‘அன் பிராண்ட்’ மதுபானங்கள் அதிகமாக வைத்திருந்தால் அதை குடிபிரியர்கள் வாங்க மறுக்கிறார்கள். தாங்கள் விரும்பும் மதுபானங்கள் எப்எல் உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களில் கிடைப்பதால் அங்கே வாங்க சென்று விடுகிறார்கள். எனவே டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் தனியார் மதுபான கடைகள் பக்கம் செல்லும் சூழல் இருக்கிறது. எனவே டாஸ்மாக்கில் முக்கிய முன்னணி பிராண்ட் மதுபானங்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். சபரி மலை சீசன் முடிந்ததும் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கமான நிலையை எட்டி விடும், என்றார்.
