சரஸ்வதி நாகரிகமா..?! கலெக்டரிடம் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், சிபிஐ, சிபிஎம் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட இயக்கங்களை சார்ந்தவர்கள் இன்று புகார் அளித்தனர். இதில் திராவிட நாகரீகத்தை மறைத்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு நாங்கள் புகார் மனு அளித்திருக்கிறோம். மேலும் வரலாற்றை மாற்றும் வகையில் நடக்கும் இந்த கருத்தரங்கை கண்டித்து வரும் 11ஆம் தேதி அனைத்து அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திராவிட கழகத்தை சேர்ந்த தோழர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *