சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

கோவை அன்னூர் ஓரைக்கால் பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான். தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் ஐந்து வயது மகனை சிலர் கடத்திச் சென்றனர். இம்ரான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள் பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தர வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இது தொடர்பாக இம்ரான் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது சிறுவனை கடத்தி சென்று மிரட்டியது 18 வயதுக்கு குறைவான மூன்று பேர் என தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *