சிறுவாணி விரிசல் அடைப்பு பணி எப்போ..?!

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில், நீர்க்கசிவை தடுப்பதற்கு மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். அணை 22.60 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நீர் தேக்கி வைக்க முடியும் அணை கட்டி 90 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பக்க சுவரில் நீர் கசிவு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு கால கட்டங்களில் சிமெண்ட் கலவையை பிரஷர் முறையில் செலுத்தினர். ஜெர்மன் டெக்னாலஜியிலும் நீர் கசிவு தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் நீர் கசிவு தடுக்க முடியவில்லை கசிவு அதிகரித்து அணையில் விரிசல் ஏற்படும் அச்சம் காணப்பட்டது இந்த நிலையில் அணையில் முழு அளவில் நீர் தேக்க தேசிய அணை பாதுகாப்பு கமிட்டி உத்தரவிட்டது. 15 மீட்டர் உயரம் குறைத்து நீர் தேக்க உத்தரவு வழங்கப்பட்டது.

அணையின் நீர் மட்டம் உச்சத்தில் இருக்கும் போது அடிக்கடி நீர் திறப்பு நடக்கிறது. தற்போது அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது. 32 அடி உயரத்திற்கு நீர் தேக்கம் இருக்கிறது. இன்னும் நீர் மட்டம் குறையும் போது பக்க சுவரை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொழில் நுட்ப குழுவினர் அணையை பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இதில் அணை சீரமைப்பு பணியை நடத்தும் காலம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அணையில் நீர் இருக்கும் போது அதை உறுதியாக்கும் பணிகளை செய்ய முடியாது என ஏற்கனவே தொழில் நுட்ப குழு தெரிவித்துள்ளது. நீர் மட்டம் குறைந்த பின்னர் தான் பணிகளை நடத்த வேண்டியிருக்கும். ஏப்ரல் மே மாதங்களில் நீர் மட்டம் தரையை எட்டும் வாய்ப்புள்ளது. அப்போது விரைவாக அணை பலமாக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியகூறு உள்ளதா என விரைவில் இரு மாநில கூட்டு கமிட்டி அதிகாரிகள் ஆலோசனை நடத்த முடிவு செய்யவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *