தங்க மோசடிக்காரர் கைது: 240 கிராம் தங்கம் பறிமுதல்
உர்வாஸ்டோர், சிலிம்பி, குஜ்ஜாடி சேம்பர் பகுதியில் உள்ள ஸ்வர்ணா ஜுவல்லர்ஸ் கடைக்கு, நவம்பர் 21ஆம் தேதி மாலை, தன்னை அருண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஒருவர் வந்தார்.
“22ஆம் தேதி பேஜாய் காபி கட பகுதியில் உள்ள அஜந்த் பிசினஸ் சென்டரில் விருந்தினர்களுக்கு தங்க பிஸ்கட்டுகள் வழங்க வேண்டி உள்ளது. 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள் வேண்டும்,” என்று தெரிவித்த அவர், வடிவத்தைத் தேர்வு செய்து, மறுநாள் மதியம் 12 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி பணியாளர்களிடம் தெரிவித்தார்.
தங்கத்தைப் பெற்றவுடன் RTGS மூலம் பணம் அனுப்புவேன் என்றும் உறுதியளித்தார்.
நவம்பர் 22ஆம் தேதி, கடை பணியாளர்கள் தங்கத்தை வழங்கச் சென்றபோது, அவர் கட்டிடத்தின் 5ஆம் மாடி கேன்டீனுக்கு அழைத்து சென்று 24 கேரட் தங்க பிஸ்கட்டுகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர், “3ஆம் மாடியில் RTGS செய்கிறேன்” என்று சொல்லி தப்பியோடியதாக கூறப்படுகிறது.
, கடை உரிமையாளர் அஜய் இராமதாஸ் நாயக் புகார் அளித்ததைத் தொடர்ந்து உர்வா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவாளி அருண் என்பவரின் இருப்பிடத்தை தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் விசாரித்த போலீசார், அவர் கோயம்புத்தூரில் இருப்பது உறுதி நிலையில், நவம்பர் 26ஆம் தேதி புலியகுளத்தில் கைது செய்தனர்.
விசாரணையில், குற்றவாளியின் உண்மைப் பெயர் புகழ் வாசன் @ புகழ் ஹசன் @ அருண் (50), சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
போலி பெயர்களைப் பயன்படுத்தி மோசடி செய்யும் பழக்கம் இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் இவரிடமிருந்து 240 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்க பிஸ்கட்டுகள் (மதிப்பு ரூ.31,04,000) பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், மும்பை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் இதேபோன்ற பல மோசடி வழக்குகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
