தமிழக முதல்வர் நாளை கோவை வருகை; 3000 போலீஸ் பாதுகாப்பு..!
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள் கூட்ட அரங்கம்
தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வரவுள்ளார். கோவை விமான நிலைய வளாகத்தில் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளது.
இதை தொடர்ந்து முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இந்த நூலகம் கட்டுமான பணிகள் 7 தளங்களில் நடக்கிறது பிரமாண்டமாக அமையும் இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது.
இந்த பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய முதல்வர் வரவுள்ளார். இதை தொடர்ந்து போத்தனூரில் காந்தி அருங்காட்சியகத்தில் சிறார்களின் பஜனை விழாவில் பங்கேற்கவுள்ளார் இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் மதியம் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டு ஒய்வெடுக்கவுள்ளார்.
மாலை 4 மணிக்கு மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் சக்கி கல்லூரியில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார். இந்த பிரமாண்ட 5 மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் கோவை வருகையை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக விமான நிலைய வளாகம் அவினாசி. ரோடு, பெரியார் நூலக வளாகம் போத்தனூர் அருங்காட்சியகம், முதல்வர் தங்கும் ஓட்டல், அவர் செல்லும் வழிப்பாதை, பாக முகவர்கள் மாநாடு வளாகம் போன்றவற்றில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முதல்வரின் கோவை வருகை கட்சியினர் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
