திருட்டு உலகமடா.. கொஞ்சம் திருந்தி நடந்துக்கடா…

கோவை நகரில் பிக் பாக்கெட் வழிப்பறி, கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக நகரின் மையப் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திருடர்கள் சுற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. கடந்த கால வழக்குகளில் சிக்கிய முக்கிய திருடர்கள் ஏமாற்று நபர்கள் குறித்த போட்டோவுடன் கூடிய போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப், அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் திருடர்கள் குறித்த போட்டோக்கள் இடம் பெற்றுள்ளது. பஸ் ஏறும்போது நைசாக பின்னால் வந்து பாக்கெட்டில் பர்சை திருடி தப்பி சென்று விடுவார்கள். எனவே பயணிகள் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த திருடர்கள் தொடர்பாக எதாவது தகவல் கிடைத்தால் போஸ்டரில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தரலாம் என ரேஸ் கோர்ஸ் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
