தீ , விபத்து , விஷம்.. அபாயங்களை தடுப்பது எப்படி..!?

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடந்தது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன், பூங்கோதை, பிரதீபா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திர குமார், அனிதா, செந்தில்குமார் , விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில் டிரைவர்கள், லைசன்ஸ் பெற வந்தவர்களுக்கு 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாக
பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்யும் முறை குறித்து விளக்கம் தரப்பட்டது.

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது , தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை மீட்பது, பாம்பு கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து விளக்கம் தரப்பட்டது .

மேலும் தீயணைப்பு துறை சார்பில் மின்சார தீ விபத்து , பெட்ரோல் , டீசல் ,கெரசின் , சிலிண்டர் மூலமாக பரவும் தீயை அணைக்கும் முறை வேதிப்பொருள்கள் தீப்பிடித்தால் அதை விரைவாக அணைக்க பயன்படுத்தும் முறை தொடர்பாக செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

ஒரே சிலிண்டரில் மூன்று வகையான தீ அணைப்பு முறை குறித்து விளக்கம் தரப்பட்டது . வாகனங்கள் ஓடும் போது தீப்பிடித்து விடுவதால் அதை உடனடியாக அணைப்பதற்கு தீ அணைப்பான் கருவியை வாகனங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *