துணை ஜனாதிபதி கோவை வருகை டிரோன் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதி சி ப ராதாகிருஷ்ணன், கோவை வரவுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகர எல்லைக்குட்பட்ட ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் பீளமேடு, கே.எம்.சி.எச்., சின்னியம்பாளையம், சிங்காநல்லூர், SIHS காலனி, இருகூர், ஏ.ஜி.புதூர், கொடிசியா வணிக வளாகம், சேரன்மாநகர், சிட்ரா,நேருநகர், காளப்பட்டி, ஹோப்ஸ், நீலாம்பூர், பந்தயசாலை மற்றும் நவ இந்தியா ஆகிய பகுதிகளுடன் அதன் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் 14.01.2026 அன்று காலை 8 மணி முதல் 15.01.2026 தேதி இரவு 10 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் விமானங்கள் (ட்ரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையினை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *