தொழிலாளர்கள் புதிய சட்டம்; போராடிய 222 பேர் கைது

இந்திய தொழிற்சங்க மையத்தின் கோவை மாவட்டம் சி ஐ டி யு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று நடந்தது . இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் நிர்வாகிகள் பேசினர் .
கடந்த 21 ம் தேதி மத்திய அரசு லேபர் கோட் திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது . இந்த அறிவிப்பில் பயன் அடைவது முதலாளி வர்க்கமாக இருக்கிறது.
வேலை நேரம் 8 மணி நேரம் இல்லை அதற்கும் கூடுதலாக எவ்வளவு நேரம் என்பதை முதலாளிகள் நிர்வாகம் முடிவு செய்யும் அளவிற்கு நிலைமை மாற்றப்பட்டு இருக்கிறது.
போனஸ் இரண்டு ஆண்டுகள் வரை கொடுக்காமல் இருக்கலாம். குறைந்தபட்ச சம்பளம் சமூக பாதுகாப்பு இனி கிடையாது. நிரந்தர தொழிலாளர்களை வைக்க வேண்டியது இல்லை . எல்லோரும் அத்துக்கூலிகள் அதுவும் சம்பள ஒப்பந்ததாரர் மூலம் தான் வழங்கப்படும் . வேலைக்கு அமர்த்துவதும் வேலை இல்லை என விரட்டுவதும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் . இது போன்ற சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியிருப்பதாக இந்த போராட்டத்தின் போது நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலை நேரத்தை கூட்டுவது வேலை வாய்ப்பு முடக்குவது தான் 150 ஆண்டு காலமாக தொழிலாளர் பெற்று வந்த உரிமைகளை சலுகைகளை பறித்து கார்ப்பரேட்டுகளின் காலடியில் போடும் நோக்கத்தில் அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதை கண்டித்து இந்த மறியல் போராட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடத்தப்பட்டது .இதில் 16 பெண்கள் உட்பட 222 பேர் ரேஸ்கோர்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
