நடிகை சமந்தா காதல் திருமணம்

பிரபல நடிகையான சமந்தா இன்று கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இவருடன் பேமிலி மேன் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சினிமா படம் இயக்குனர் ராஜு நிதிமோரு வந்திருந்தார். இவர்கள் இருவரும் யோக மையத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா ஏற்கனவே பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் சமந்தாவுக்கும் ராஜு நிதி மோருவுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இந்த காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். சமந்தா அடிக்கடி ஈஷா யோக மையம் வந்து செல்வார். குறிப்பாக சிவராத்திரி விழாவின்போது யோக மையத்தில் தியானத்தில் ஈடுபடுவது அவரின் வழக்கம். அவர் தனது மன நிம்மதிக்காக ஈசா யோக மையத்தை மிகவும் விரும்பினார். இந்த நிலையில் அவர் தனது காதலருடன் கோவை வந்து ஈஷா யோக மையத்தில் லிங்க பைரவி மற்றும் தியானலிங்கத்தின் முன்பு வணங்கி திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக காட்சி தந்த சமந்தாவை பார்த்த யோகா மையம் வந்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *