நண்பேன்டா…. பிரண்ட்ஸ விடாதீங்க ..சூப்பர் ஸ்டார் வீடியோ வைரல்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில் ரஜனிகாந்த், ” 50 வருஷத்துக்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் சந்திச்சு இருக்கீங்க.

பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக இருக்காங்க.

முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இங்கதான் படிச்சிருக்காங்க.

என்னுடைய சம்பந்தி வணங்கா முடியும் இங்கு படித்தவர்தான் .

இதுபோல நிறைய பேர் இங்கு படித்து வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் முன்னாள்

டிஜிபி சைலேந்திரபாபு சர்வீஸ் சிறப்பானது. அவரோட அந்த பிட்னஸ் எனக்கு பிடிக்கும், சினிமா ஹீரோ கூட அந்த மாதிரி இருக்க மாட்டாங்க. முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் அறிவு ஆழமானது, அவருக்கு தெரியாத விஷயங்களை இருக்காது என்று சொல்லலாம், அந்த அளவிற்கு எல்லா விஷயங்கள் பத்தியும் அவர் சொல்லுவார்

அவரைப் போல ஒரு மென்மையான மனிதரை பார்த்தது கிடையாது. பல விதமான முறைகளில் உறவினர்கள் இருந்தாலும் நண்பர்களை பார்க்கும் பொழுது புத்துணர்வு இருக்கும் ., நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியானதாக இருக்கும்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனது நண்பர்களை சந்திப்பேன் . சிவாஜி என்ற பெயரை நான் மறந்துவிட்டாலும் அவர்கள் அந்த பெயரை அழைத்து கூப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் .

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நண்பர்கள் சந்தித்து பேசுவது புத்துணர்ச்சியாக இருக்கும் . அவர்கள் டே இங்க வாடா என்னடா பண்ற எனக்கு என கேட்கும் போது சந்தோசமாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *