படிக்கணுமா குடிக்கணுமா..!கோவை புளியகுளத்தில் பரபரப்பு போஸ்டர்..

கோவை புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மதுபான கடைகள் குறிப்பாக எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அதிகரிக்க என்ன காரணம் மாணவர்கள் படிக்க வேண்டுமா குடிக்க வேண்டுமா
இது புலிய குளமா சாராய குளமா
இதுதான் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் புளியகுளம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை நகரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் அதிரடி போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது.

பல இடங்களில் தவறுகளை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . இனியும் கோவை நகரில் போஸ்டர் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *