பறவைக் காய்ச்சல் கோவை பார்டரில் அலார்ட்

கேரள மாநிலம் ஆலப்புழா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவு கறிக்கோழி மற்றும் முட்டைகள் சப்ளை ஆகிறது சமீபகாலமாக கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகமானதை தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் கேரளாவில் பரவிய நோய் கோவை மாவட்டத்தில் அதிகரிக்காமல் தடுக்க மாவட்ட எல்லையான வாளையார் வேலந்தாவளம் மீனாட்சிபுரம் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோழி மற்றும் முட்டை லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மருந்து தெளித்து அனுப்புகிறார்கள். வழக்கமாக இந்த சீசனில் பறவை காய்ச்சல் வருவது இயல்புதான். தொடர்ந்து பராமரிப்பு சிறப்பாக செய்தால் நோய் பரவல் இருக்காது என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *