பழைய பென்ஷன் கேட்டவர்கள் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.
காலியாக உள்ள பல லட்சம் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் .ஊழியர்களுக்கு ஊதியம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர்கள் பதவியை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டது . இந்த கோரிக்கைகள் நிறைவேற்றால் வரும் ஜனவரி மாதம் முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டம் நடத்தியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *