போதை நபரை தாக்கிய பெண்கள்..

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாச முறையில் பேசியதாக தெரிகிறது. கோபமடைந்த பெண்கள் பஸ்ஸில் வைத்து அவரை சரமாறியாக தாக்கினார். பின்னர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர்.

ரேஸ் கோர்ஸ் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில் ரத்த காயம் உடன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினார்களா அவரை வேறு யாராவது தாக்கினார்களா என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது நிலைமை இருக்கிறது. பெண்களிடம் அடி உதை வாங்கிய நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *