போத்தனூர் தான் பாத் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி துவக்கினார்..!
கோவை மாவட்டத்தில் போத்தனூர்- தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவை இன்று மாலை துவங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் நடந்த விழாவில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ரயில் சேவையை துவக்கினார்.
போத்தனூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு மாலை 5.30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. போத்தனூர் தன்பாத் அம்ருத் பாரத் ரயில் (வண்டி எண்: 06619) வரும் 13ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், துவாடா, கொட்டவாலசா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடை, முனி குடா, கேசிங்கா, டிட்லாகாரா,
பாலாங்கிர், பர்காத் ரோடு, சாம்பல் பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, ஹட்டியா, ராஞ்சி, மூரீ, பொக்காரா ஸ்டீல் சிட்டி, சந்திரபுரா, கட்ராகாரா ரயில்வே ஸ்டேஷன் வழியாக தான்பாத் சென்றடையும். இந்த ரயிலில் 8 படுக்கை வசதி பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்று திறனாளிகள் பெட்டி 2, பேன்ட்ரி பெட்டி 1 என அமைக்கப்பட்டிருக்கிறது.
வந்தே பாரத் ரயில் சேவை போத்தனூரில் துவங்கியதிற்கு மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதில் போத்தனூர் ரயில் நிலையத்தில் எல்இடி திரை அமைத்து திருச்சியிலிருந்து பிரதமர் பேசியதை நேரலையாக காட்டினர்.
இவ்விழாவில், போத்தனூர் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே டிவிசன் மேலாளர் பன்னா லால், கூடுதல் டிவிசன் மேலாளர் சரவணன் தலைமை பொறியாளர் மகேஷ், பாஜக நிர்வாகி வசந்தராஜன், அதிமுக எம்எல்ஏ தாமோதரன், ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் நிர்வாகி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது 65 வயது நபர் ஒருவர், ஓடும் ரயிலில் ஏற முயன்றார். கூட்ட நெரிசலில் அவர் தடுமாறி ரயில் பாதையில் விழ முயன்றார். அவரை ரயில் பாதுகாப்பு படையினர் பிடித்து கொண்டனர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
