போலீசுக்கு பூங்கொத்து… ரவுடியாக மாற்றியதால் விவசாயிகள் கெத்து..!
கருமத்தம்பட்டியில் மக்கள் பிரச்சனைக்காக போராடிவரும் எங்களை கஞ்சா போதைப்பொருள் வியாபாரிகள் போல் ரவுடியாக சித்தரித்து விட்டார்கள். எங்களை ரவுடி பட்டியலில் சேர்த்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் கருமத்தம்பட்டி போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை கூறியும் எங்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க மறுத்து விட்டார்கள் என புலம்பி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், “போலீசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு விரைவில் பூங்கொத்து அளித்து பாராட்டு தெரிவிக்க இருக்கறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றனர்.
