போஸ்டர் டர்ர்.., ஓட்டும்போது கொர்ர்ர்…!

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், உக்கடம் மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அத்துமீறி அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் .

அரசு சுவர் மற்றும் அரசு சார்பு இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது . இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . அதுவும் அதிகார தோரணையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக தெரிகிறது.

மாநகர் முழுவதும் போஸ்டர் கலாச்சாரம் அதிகமானதை தொடர்ந்து இன்று மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆட்களை வைத்து போஸ்டர்களை கிழித்து வருகின்றனர். பல இடங்களில் பிரஷர் வாட்டர் ஸ்ப்ரே செய்தும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். போஸ்டர்களை ஒட்டும் வரை வேடிக்கை பார்க்கக் கூடாது. முன்கூட்டியே தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *